செய்திகள் :

கூலி படம் குறித்த வதந்தி! ஆமிர் கானின் நிறுவனம் விளக்கம்!

post image

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ன் “கூலி” திரைப்படம் குறித்த வதந்திகளுக்கு, நடிகர் ஆமிர் கானின் தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கூட்டணியில் உருவான “கூலி” திரைப்படம், வரும் ஆக.14 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்தியாவின் முன்னணி நடிகர்களான, நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சௌபின் சாஹிர், ஷ்ருதி ஹாசன் ஆகியோர் இந்தத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும், பிரபல பாலிவுட் நடிகரான ஆமிர் கான், இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளது, மொழிகளைக் கடந்த ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், சிறப்புத் தோற்றத்தில் நடித்தது மட்டுமில்லாமல், தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் இந்தப் படத்தை, ஆமிர் கான் விநியோகிக்கவுள்ளதாகச் செய்திகள் பரவின.

இதனை மறுத்துள்ள அவரது தயாரிப்பு நிறுவனமான ‘ஆமிர் கான் ப்ரொடக்‌ஷன்ஸ்’, இந்தச் செய்திகள் அனைத்தும் வதந்தியெனவும், நட்பு ரீதியாக மட்டுமே அவர் சிறப்புத் தோற்றத்தில் நடித்ததாகவும் உறுதி செய்துள்ளது.

இதுகுறித்து, அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:

“ஆமிர் கான் உள்பட அவரது நிறுவனத்தைச் சேர்ந்த எந்தவொரு நபரும், கூலி படத்தின் விநியோகிப்பில் ஈடுபடவில்லை. இப்படத்தில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோருடனான நட்பின் அடிப்படையில் மட்டுமே ஆமிர் கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்” என விளக்கமளித்துள்ளார்.

முன்னதாக, நடிகர் ஆமிர் கானின் நடிப்பிலும், தயாரிப்பிலும் உருவாகி வெளியான “சித்தாரே ஜமீன் பர்” திரைப்படம், ரசிகர்களிடையே மிகப் பெரியளவில் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:ரெட்ட தல டீசர்!

Actor Aamir Khan's production company has clarified the rumors surrounding superstar Rajinikanth's film "Coolie".

ஒன்றாக இணைந்த குடும்பம்...பாக்கியலட்சுமி தொடர் 1469 எபிசோடுகளுடன் நிறைவு!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாக்கியலட்சுமி தொடர் 1469 எபிசோடுகளுடன் நிறைவடைந்தது.கணவரால் ஏமாற்றப்பட்டு கைவிடப்பட்டப் பெண், சுயமாக முன்னேறி, எப்படி குடும்பத்தைக் கவனிக்கிறாள் என்பதை கருவாக ... மேலும் பார்க்க

வசந்த் ரவியின் இந்திரா டிரைலர்!

நடிகர் வசந்த் ரவி நடித்த இந்திரா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.தரமணி, ராக்கி படங்களின் மூலம் கவனம் பெற்ற நடிகரான வசந்த் ரவி தற்போது இந்திரா என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.இயக்குநர் சபரிஸ் ந... மேலும் பார்க்க

ஃபஹத் ஃபாசிலின் ஓடும் குதிர சாடும் குதிர டிரைலர்!

நடிகர் ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவான ஓடும் குதிர சாடும் குதிர படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. மாரீசன் திரைப்படத்தைத் தொடர்ந்து ஃபஹத் ஃபாசில் நடித்து முடித்துள்ள படம் ஓடும் குதிர சாடும் குதிர. காதல்... மேலும் பார்க்க

மாநகரம் - கூலி உறங்கா இரவுகள்... கலை இயக்குநர் பற்றி லோகேஷ் பெருமிதம்!

கூலி திரைப்படத்தின் கலை இயக்குநர் குறித்து லோகேஷ் கனகராஜ் பெருமிதமாகப் பதிவிட்டுள்ளார். கூலி படத்தில் வேலை பார்த்த ஒரு கலைஞர் குறித்து லோகேஷ் தினமும் பதிவிட்டு வருகிறார்.இந்தப் படத்துக்கு கலை இயக்குநர... மேலும் பார்க்க

தொலைக்காட்சியிலும் வெளியாகும் மாமன்!

மாமன் திரைப்படம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் எழுத்து இயக்கத்தில், சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், குடும்பப் பொழுதுபோக்கு திர... மேலும் பார்க்க

சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ்: 3-ஆவது சுற்றில் அா்ஜுன் எரிகைசி, விதித், கீமா், பிரனேஷ் வெற்றி

சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின் மாஸ்டா்ஸ் பிரிவில் அா்ஜுன் எரிகைசி, வின்சென்ட் கீமா், விதித், பிரனேஷ் வெற்றி பெற்றனா். தனது ஆட்டத்தில் வெற்றி பெற்றாா். ஹயாட் ரீஜென்சி ஓட்டலில் நடைபெறும் இப்ப... மேலும் பார்க்க