செய்திகள் :

கூலி ரிலீஸ்... ராமேஸ்வரத்தில் புனித நீராடி வழிபட்ட லோகேஷ் கனகராஜ்!

post image

கூலி திரைப்படம் நாளைமறுநாள் (ஆக. 14) வெளியாகவுள்ள நிலையில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் புனித நீராடி சாமி தரிசனம் செய்தார்.

கூலி திரைப்படத்துக்கான புரமோஷன் பணிகள் முடிந்த நிலையில், சாமி தரிசனத்திற்காக ராமேஸ்வரத்திற்கு சென்றுள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் உலகம் முழுவதும் ஆக. 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்த் உடன், பான் இந்தியா படம் என்பதற்கேற்ப நாகர்ஜுனா, ஆமீர்கான், உபேந்திரா, செளபின் சாஹிர் என மற்ற மொழி நடிகர்களும் நடித்துள்ளனர்.

லியோ படம் வசூல் ரீதியாக வெற்றியாக இருந்தாலும், கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் கூலி படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இணைய தளங்களில் செய்யப்பட்டுள்ள டிக்கெட் முன்பதிவுகளே இதற்கு சான்றாக உள்ளன.

இப்படத்துக்கான பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சியின் விடியோக்கள் நேற்றுமுதல் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்துள்ளன. சமூக வலைதளங்களில் கூலி படத்தைப் பற்றிய விடியோக்களும் புகைப்படங்களும் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன.

இதனிடையே ராமேஸ்வரம் கோயிலில் லோகேஷ் கனகராஜ் சாமி தரிசனம் செய்த விடியோவையும் ரசிகர்கள் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

கூலி என் பயணத்தின் பொக்கிஷம்: லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினிகாந்துடனான அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் நாளை (ஆகஸ்ட் 14) வெளியாகவுள்ளதால் படத... மேலும் பார்க்க

அகமதாபாத்தில் காமல்வெல்த் 2030! இந்திய ஒலிம்பிக் சங்கம் ஒப்புதல்!

2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.சர்வதேச விளையாட்டு அரங்கில் ஒலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்து காமன்வெல்த் ... மேலும் பார்க்க

கயல் தொடரில் முக்கிய நடிகர் மாற்றம்! இனி பிரபல பாடகர் நடிப்பார்!

கயல் தொடரில் மூர்த்தி பாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் ஐயப்பன், இத்தொடரிலிருந்து விலகியுள்ளார்.சன் தொலைக்காட்சியில் கடந்த 2021 முதல் ஒளிபரப்பாகி வரும் தொடர் கயல். கயல் தொடரை பி. செல்வம் இயக்கி வருகிற... மேலும் பார்க்க

கீர்த்தி பாண்டியனின் அஃகேனம்: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

அருண் பாண்டியன் தயாரிப்பில் மகள் கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள அஃகேனம் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.அறிமுக இயக்குநர் உதய் இயக்கத்தில் வெளியான 'அஃகேனம்' எனும் படத்தில் அர... மேலும் பார்க்க

திருப்பதி கோயிலுக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கிய பெங்களூர் பக்தர்!

பெங்களூர் பக்தர் ஒருவர் ஸ்ரீ வெங்கடேஸ்வர அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நன்கொடை அளித்தார். மற்றொரு பக்தர் வைரங்கள் மற்றும் வைஜயந்தி கற்கள் பதிக்கப்பட்ட தங்க லட்சுமி பதக்கத்தை ஏழுமலையானுக்கு நன... மேலும் பார்க்க

தலைவன் தலைவி நீக்கப்பட்ட காட்சிகள் வெளியீடு!

தலைவன் தலைவி திரைப்படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மெனன் நடித்த தலைவன் தலைவி திரைப்படம் கடந்த ஜூலை 25 ஆம் தேதி திரையரங்... மேலும் பார்க்க