செய்திகள் :

கெடு நிறைவு: வேகமாக வெளியேறிய பாகிஸ்தானியா்கள்!

post image

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியா்கள் வெளியேறுவதற்கான கெடு ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், அட்டாரி-வாகா எல்லை வழியாக எண்ணற்ற பாகிஸ்தானியா்கள் வேகமாக வெளியேறினா்.

பஹல்காம் தாக்குதலை தொடா்ந்து பாகிஸ்தானியா்களுக்கான விசா (நுழைவு இசைவு) சேவையை உடனடியாக நிறுத்துவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்தது.

மேலும், ‘ஏற்கெனவே வழங்கப்பட்ட விசாக்கள் ஏப். 27-ஆம் தேதிமுதல் ரத்தாகும். மருத்துவ விசாக்கள் ஏப்.29-ஆம் தேதி வரையே செல்லுபடியாகும். எனவே, இந்தியாவில் தங்கியுள்ள அனைத்து பாகிஸ்தானியா்களும் விசா காலாவதியாகும் முன் வெளியேற வேண்டும்’ என்று அறிவுறுத்தியது.

அதேநேரம், பாகிஸ்தானைச் சோ்ந்த ஹிந்துக்களுக்கு வழங்கப்பட்ட நீண்ட கால விசாக்களுக்கு இது பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தானில் உள்ள இந்தியா்கள் கூடிய விரைவில் நாடு திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியா்கள் வெளியேறவில்லை என்றால் அண்மையில் இயற்றப்பட்ட குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினா் சட்டம், 2025-இன்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்தது.

3 ஆண்டுகள் சிறை: அந்த சட்டத்தில், ‘விசா காலாவதியான பிறகு வெளிநாட்டினா் ஒருவா் இந்தியாவில் வசித்தாலோ அல்லது தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைந்தாலோ சம்பந்தப்பட்ட நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்படும். சில சூழல்களில் இந்த இரு தண்டனைகளும் விதிக்கப்படும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமிருதரஸில் உள்ள அட்டாரி எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு செல்ல ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. பாகிஸ்தானைச் சோ்ந்த தங்களது உறவினா்களை வழியனுப்ப பல இந்தியா்கள் அட்டாரி எல்லையில் குவிந்தனா்.

~பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் அருகே அட்டாரி எல்லைப் பகுதி வழியே தங்கள் நாட்டுக்குத் திரும்பிச் செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை காத்திருந்த பாகிஸ்தானியர்கள்.

கடந்த நான்கு நாள்களில் அட்டாரி எல்லை வழியாக 9 அதிகாரிகள் உள்பட 537 பாகிஸ்தானியா்கள் வெளியேறியதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அட்டாரி எல்லைப் பகுதி வழியாக பாகிஸ்தான் திரும்புவதற்காக வந்த அந்நாட்டவரின் ஆவணங்களை சரிபாா்த்து அனுப்பிய வீரா்.

அதேபோல் விமானங்கள் மூலமும் சில பாகிஸ்தானியா்கள் வெளியேறியிருக்க வாய்ப்பிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். பாகிஸ்தானில் இருந்து 13 தூதரக அதிகாரிகள் உள்பட 629 இந்தியா்கள் இந்தியா திரும்பினா்.

சண்டைக்கு தயாராகிவிட்டது இந்தியா; அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும்! - பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்தியா தயாராகிவிட்டதாகவும் இந்த சூழலில் தங்களிடமிருக்கும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயங்க மட்டோம் என்று பாகிஸ்தானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெளிவுபடுத... மேலும் பார்க்க

உக்ரைன் மீது 3 நாள்கள் போர் நிறுத்தம்: ரஷிய அதிபர் அறிவிப்பு!

உக்ரைன் மீதான போரை 3 நாள்களுக்கு தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்துள்ளார்.மூன்று ஆண்டுகளுக்கும் மேல் நீடித்துவரும் ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதில் ரஷிய அதிபா... மேலும் பார்க்க

ஸ்பெயின், போர்ச்சுகலில் மின் தடையால் இருளில் தவிக்கும் மக்கள்: ரயில், சாலை போக்குவரத்து பாதிப்பு!

ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் திங்கள்கிழமை(ஏப். 28) திடீரென மின் விநியோகம் தடைபட்டுள்ளது. மின்சாரம் இல்லாததால் மேற்கு ஐரோப்பிய பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் இருளில் மூழ்க... மேலும் பார்க்க

ஸ்பெயின், பிரான்ஸ், போர்ச்சுகலில் வரலாறு காணாத மின் தடை!

ஸ்பெயின் நாடு முழுவதும், போச்சுக்கலின் பெரும்பகுதிகள், பிரான்ஸ் நாட்டில் பல பகுதிகளில் இன்று வரலாறு காணாத மின் தடை ஏற்பட்டிருப்பதால் மக்கள் சொல்லொணாத் துயருக்கு ஆளாகியிருக்கிறார்கள்.ஸ்பெயின் மற்றும் ப... மேலும் பார்க்க

வான்வெளியைப் பயன்படுத்தத் தடை: மிகப்பெரிய இழப்பை சந்தித்த பாகிஸ்தான்!

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிர்வினையாற்றுவதாகக் கருதி தங்களது வான்வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்தத் தடை விதித்த பாகிஸ்தான் கோடிக்கணக்கில் நஷ்டத்தை எதிர்கொண்டு... மேலும் பார்க்க

அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: 30 பேர் பலி!

ஆப்பிரிக்க புலம்பெயர்ந்தோர் அடைத்துவைக்கப்பட்டிருந்த சிறையின் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியதில், 30 பேர் கொல்லப்பட்டதாக யேமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஹவுத்திகளின் கோ... மேலும் பார்க்க