கேஜிஎஃப் - 1 வசூலை முறியடித்த எம்புரான்!
மோகன்லாலின் எம்புரான் திரைப்படம் கேஜிஎஃப் -1 படத்தின் வசூலை முறியடித்துள்ளது.
பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நாயகனாக நடித்த எம்புரான் திரைப்படம் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர், இந்திரஜித் சுகுமாரன் உள்பட பல பிரபலங்கள் இதில் நடித்திருந்தனர்.
படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனால், எம்புரானில் குஜராத் மத கலவரத்தைப் பிரதிபலிப்பதைப்போல காட்சிகள் இடம்பெற்றிருந்ததால் வலதுசாரிகள் படத்தைக் கடுமையாக விமர்சித்தனர். இதையடுத்து, எம்புரானில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டன.
தொடர்ந்து, இப்படம் வெளியான 11 நாள்களில் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகப் படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், கேரளத்தில் மட்டும் ரூ. 100 கோடியை வசூலித்து எம்புரான் அசத்தியதுடன் கேஜிஎஃப் - 1 படத்தின் ஒட்டுமொத்த வசூலை முறியடித்துள்ளது. கேஜிஎஃப் முதல் பாகம் ரூ. 240 கோடி வரை வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ‘நம்பவே முடியாத கதை..’ அட்லியைப் பாராட்டிய லோலா விஎஃப்எக்ஸ் நிறுவனர்!