ஏசி புறநகர் மின்சார ரயில் சேவை: பயணிகள் கருத்து தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண் அறிவிப்ப...
கேத்தி பகுதியில் குடியிருப்பு பகுதியில் உலவிய கரடி
உதகை அருகே உள்ள கேத்தி பாலடா குடியிருப்புப் பகுதியில் உலா வரும் கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
உதகையை சுற்றியுள்ளப் பகுதியில் அண்மைக்காலமாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கேத்த பாலடா பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு நுழைந்த கரடி சில மணிநேரம் சுற்றித் திரிந்தது அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. கரடி நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரியும் கரடியைப் பிடித்து வனப் பகுதிக்குள் விட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.