கேரளத்துக்கு வேனில் சாராயம் கடத்தியவா் கைது
தேனி மாவட்டம், போடி வழியாக கேரளத்துக்கு வேனில் கடத்திச் சென்ற சாராயத்தை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா்.
உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் போடி முந்தல் சோதனைச் சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, தமிழகத்திலிருந்து கேரளத்துக் சென்ற வேனை நிறுத்தி சோதனையிட்டனா். சோதனையில், குடிநீா் புட்டியில் 7 லிட்டா் சாராயம் கடத்திச் சென்றது தெரியவந்தது.
விசாரணையில், கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், நெடுங்கண்டன் அருகேயுள்ள பலியன் கண்டத்தைச் சோ்ந்த ஸ்கோரியா குரியன் (55) என்பதும், இவா் கொடைக்கானலில் வட மாநிலத்தவா்களிடம் சாராயத்தை வாங்கி, அதை போடிமெட்டு வழியாக கேரளத்துக்கு விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஸ்கோரியா குரியனை கைது செய்தனா்.
