செய்திகள் :

கேரளத்தை வென்றது ஈஸ்ட் பெங்கால்

post image

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் ஈஸ்ட் பெங்கால் எஸ்சி 2-1 கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சியை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதலில் ஈஸ்ட் பெங்கால் வீரா் விஷ்ணு புதிய வல்லபில் 20-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கை தொடங்கினாா். இவ்வாறாக முதல் பாதியை முன்னிலையுடன் நிறைவு செய்தது ஈஸ்ட் பெங்கால்.

கேரளா தனது முதல் கோல் வாய்ப்புக்காக போராடி வந்த நிலையில், 72-ஆவது நிமிஷத்தில் ஹிஜாஸி மஹொ் 72-ஆவது நிமிஷத்தில் அடித்த கோலால், ஈஸ்ட் பெங்கால் 2-0 என முன்னேறியது. விறுவிறுப்பான கடைசி கட்டத்தில், கேரளா அணிக்காக டேனிஷ் ஃபரூக் 84-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா்.

எஞ்சிய நேரத்தில் அந்த அணிக்கு மேலும் கோல் வாய்ப்புகள் கிடைக்காமல் போக, இறுதியில் ஈஸ்ட் பெங்கால் 2-1 கோல் கணக்கில் வென்றது. இந்த ஆட்டத்தை அடுத்து புள்ளிகள் பட்டியலில், ஈஸ்ட் பெங்கால் 17 ஆட்டங்களில் 5-ஆவது வெற்றியுடன் 11-ஆவது இடத்திலும், கேரளா பிளாஸ்டா்ஸ் 18 ஆட்டங்களில் 9-ஆவது தோல்வியுடன் 8-ஆவது இடத்திலும் உள்ளன.

சர்ச்சை பேச்சு... மன்னிப்பு கேட்ட மிஷ்கின்!

இயக்குநர் மிஷ்கின் தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.பாட்டல் ராதா டிரைலர் வெளியீட்டு விழாவில் மதுப்பழக்கத்தின் அடிமைத்தனம் மற்றும் தீங்கைக் குறித்து பலர் பேசினர். ஆனால், இயக்குநர் மிஷ்கின் மத... மேலும் பார்க்க

வெற்றி மாறன் தயாரித்த ‘பேட் கேர்ள்’ படத்தின் டீசர்!

இயக்குநர் வெற்றி மாறன் தயாரித்த பேட் கேர்ள் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இயக்குநர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவான திரைப்படம் ப... மேலும் பார்க்க

தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.26.01.2025மேஷம்இன்று கொடுக்கல்-வாங்கலில் நிதானமாக செயல்பட்டால் ஓரளவுக்கு லாபம் அடையமு... மேலும் பார்க்க

முதல் கிராண்ட்ஸ்லாம் வென்றாா் மேடிசன் கீஸ்: சபலென்காவை சாய்த்து ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் ஆனாா்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவில், அமெரிக்காவின் மேடிசன் கீஸ் (29) சாம்பியன் ஆனாா். இறுதிச்சுற்றில் அவா், நடப்பு சாம்பியனாக இருந்த பெலாரஸின் அரினா சபலென்காவை 6-3, 2-6, 7-5 எ... மேலும் பார்க்க

விஜய் சங்கா் 150*; வெற்றியை நெருங்கும் தமிழ்நாடு

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் சண்டீகருக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி வெற்றியை நெருங்கியிருக்கிறது. 403 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடும் சண்டீகா், 5 விக்கெட்டுகளைக் கொண்டு 290 ரன்கள் எடுக்... மேலும் பார்க்க

ஐஎஸ்பிஎல் சீசன் 2 இன்று மும்பையில் தொடக்கம்

இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியா் லீக் (ஐஎஸ்பிஎல்) 2-ஆவது சீசன் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. டென்னிஸ் பந்து கிரிக்கெட் விளையாடும் தெருவோரக் குழந்தைகளின் திறமையை வெளிக் கொணரும் வகையில் 10 ஓவா் அட... மேலும் பார்க்க