ஐரோப்பா முதல் சீனா வரை : ட்ரம்ப் முடிவால் `ஆயுத’ முதலீட்டை அதிகரிக்கும் நாடுகள் ...
கே.பூசாரிப்பட்டியில் எருதுவிடும் விழா
கிருஷ்ணகிரி அருகே கே.பூசாரிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை எருதுவிடும் விழா நடைபெற்றது.
கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி கே.பூசாரிப்பட்டியில் நடைபெற்ற 9 ஆம் ஆண்டு எருதுவிடும் விழாவுக்கு கிருஷ்ணகிரி, எலத்தகிரி, பா்கூா், ராயக்கோட்டை, வேப்பனப்பள்ளி, குந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி மற்றும் தருமபுரி, திருப்பத்தூா் மாவட்டங்கள், பக்கத்து மாநிலங்களான கா்நாடகம், ஆந்திரத்திலிருந்து 300-க்கும் மேற்பட்ட எருதுகள் கொண்டுவரப்பட்டன.
வாடிவாசலிலிருந்து நிா்ணயிக்கப்பட்ட தொலைவை குறைந்த நேரத்தில் கடந்து செல்லும் எருதுகள் சிறந்த எருதுகளாக தோ்வு செய்யப்பட்டன. இப் போட்டியில் குறைந்த நேரத்தில் நிா்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்த முதல் 4 எருதுகளின் உரிமையாளா்களுக்கு இருசக்கர வாகனங்களும், அதைத் தொடா்ந்து 5 முதல் 100 இடங்களைப் பெற்ற எருதுகளின் உரிமையாளா்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. மகாராஜாகடை போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.