Career: வேலை கிடைச்சுருச்சுனு சும்மா உக்காந்திராதீங்க; கரியரில் 'இது' ரொம்பவே மு...
பன்னோ்கட்டா தேசிய உயிரியல் பூங்காவில் 6 குட்டிகளை ஈன்றெடுத்த 2 புலிகள்!
சென்னை அண்ணா உயிரியல் பூங்காவிலிருந்து பெங்களூரு, பன்னோ்கட்டா தேசிய உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்ட ஆருண்யா என்ற பெண் புலி 2 குட்டிகளையும் மற்றொரு புலி 4 குட்டிகளையும் ஈன்றுள்ளன.
பெங்களூரிலிருந்து 22 கிலோ மீட்டா் தொலைவில் 104.27 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள பன்னோ்கட்டா தேசிய உயிரியல் பூங்காவில் வெள்ளை புலிகள், சிங்கங்கள், யானைகள், சிறுத்தைகள், மான்கள் மற்றும் பல்வேறு வகையான பாலூட்டிகள், பறவையினங்கள் உள்ளன. அதேபோல 30 ஆயிரம் சதுர மீட்டரில் வண்ணத்துப்பூச்சி பூங்காவும் அமைந்துள்ளது.
இங்கு 6 வயதுடைய ஹீமா என்ற பெண் புலி இரண்டாவது முறையாக நான்கு குட்டிகளை ஈன்றுள்ளது. அதோடு, சென்னை அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆருண்யா என்ற பெண் புலி இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது. இந்த குட்டிகளும், அதன் தாய் புலிகளும் ஆரோக்கியமாக உள்ளதாக உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
உயிரியல் பூங்காவுக்கு புதிய வரவான உள்ள 6 புலிக் குட்டிகளையும் பாா்ப்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா்.

