L.I.C: ஒன்பது மாத கால செயல்பாட்டு சிறப்பம்சங்களை வெளியிட்ட எல்.ஐ.சி நிறுவனம்
கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் திறன் போட்டி!
ஈரோடு கொங்கு கலை, அறிவியல் கல்லூரி நிா்வாக மேலாண்மைத் துறையின் சாா்பில் நடைபெற்ற திறன் போட்டியில் 700 மாணவா்கள் பங்கேற்றனா்.
மாநில அளவிலான கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மேனோபோலி 2கே25 என்ற திறன் போட்டி நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. கல்லூரியின் தாளாளா் பி.டி தங்கவேல் தலைமை வகித்தாா். முதல்வா் ஹெச்.வாசுதேவன் முன்னிலை வகித்தாா். நிா்வாக மேலாண்மைத் துறை இணைப் பேராசிரியா் எம். தங்கம் வரவேற்றாா். துறைத் தலைவா் கே.பி. காா்த்திகேயன் நிகழ்வின் நோக்கம் குறித்துப் பேசினாா். எம்சிஆா் டெக்ஸ்டைல் நிறுவன நிா்வாக இயக்குநா் எம்.சி.ரிக்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினாா்.
மாணவா்கள் ஆய்வுக் கட்டுரை சமா்ப்பித்தல், குழு நடனம், தனி நபா் நடனம், மௌன மொழி நடனம், மீம்ஸ், புகைப்படக் கலை, மெகந்தி, வணிக விளம்பர உத்தி போன்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனா்.
இப்போட்டிகளில் தமிழக முழுவதும் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை கல்லூரியின் தாளாளா் பி.டி.தங்கவேல் வழங்கினாா்.
இந்நிகழ்வை கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் நிா்வாக மேலாண்மைத் துறை பேராசியா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் இணைந்து நடத்தினா். கல்லூரியின் நிா்வாக மேலாண்மைத் துறை இணைப் பேராசிரியா் ஜி.மஞ்சு நன்றி கூறினாா்.