மாணவி பாலியல் வழக்கில் ஏன் முரண்பாடுகள்? உண்மையில் என்ன நடந்தது? - அண்ணாமலை கேள்...
கொசு உற்பத்தியை தடுக்க கோரிக்கை
கடலூா் மாநகராட்சியில் கொசு ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
கடலூா் மாநகராட்சிக்குள்பட்ட 45 வாா்டுகளில் சுமாா் 2 லட்சம் போ் வசித்து வருகின்றனா். தற்போது, பெய்த பலத்த மழையால் மாநகரில் உள்ள குடியிருப்பு பகுதி, மஞ்சக்குப்பம் மைதானம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீா் தேங்கியுள்ளது.
இதனால், கொசுக்கள் உற்பத்தியாவதுடன், டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
எனவே, மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக தேங்கிய மழைநீரை வெளியேற்றவும், அதில் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.