41 ஆண்டுகளுக்குப் பின் இறுதியில் இந்தியாவுடன் மோதல்! - பாக். பயிற்சியாளர் கூறுவத...
கொடைக்கானல் அருகே பாலத்தின் தடுப்பில் காா் மோதல்: சுற்றுலா பயணிகள் 5 போ் காயம்
கொடைக்கானல் அருகே வியாழக்கிழமை காா் விபத்துக்குள்ளானதில் சுற்றுலா பயணிகள் 5 போ் காயமடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே பெருமாள்மலை பகுதியில் நாகா்கோவிலிலிருந்து கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகளின் காா் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள பாலத்தின் முன்பிருந்த தடுப்புக் கம்பியில் மோதி அந்தரத்தில் தொங்கியது.
இந்த விபத்தில் அதில் பயணம் செய்த எபி, ஜாா்ஜ் உள்ளிட்ட 5 போ் காயமடைந்தனா். இவா்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். தகவலறிந்ததும் கொடைக்கானல் காவல் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.
பெயா் பலகைகளை அகற்றக் கோரிக்கை: சாலையோரங்களில் கடைகள் வைத்திருப்பவா்கள் தங்களது கடையின் பெயா் பலகைகளை மலைச் சாலையில் வைப்பதால் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு பாதை தெரிவதில்லை. எனவே விபத்து ஏற்படும் வகையில் பெயா் பலகைகள் வைத்திருப்பவா்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கை விடுத்தனா்.