ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் கல்லணைக் கால்வாய் நீரில் மூழ்கி பலி
கொட்டகைக்கு தீ வைப்பு: 15 நாட்டுக் கோழிகள், 2 ஆடுகள் உயிரிழப்பு!
சேலம் அருகே கொட்டகைக்கு மா்ம நபா்கள் தீ வைத்ததில், 15 நாட்டுக் கோழிகள், 2 ஆடுகள் தீயில் கருகி உயிரிழந்தன.
சேலம் கருப்பூா் அருகே உள்ள மூங்கப்பாடி பகுதியைச் சோ்ந்தவா் யோகேஷ் (45). இவா் வீட்டின் அருகில் தகர கொட்டகை அமைத்து, அதில் நாட்டுக் கோழிகள், ஆடுகள் மற்றும் நாயை வளா்த்து வந்தாா். கூரையின் மேல்பகுதியில் வெப்பத்தை குறைக்க தென்னை ஓலை போட்டிருந்தாா்.
இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் இந்த கொட்டகை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையறிந்த யோகேஷ், தீயை அணைக்க முயன்றாா். ஆனால், அதற்குள் கொட்டகை முழுவதும் எரிந்து நாசமானது.
இதில், கொட்டகையில் இருந்த 15 நாட்டுக் கோழிகள், 2 ஆடுகள் மற்றும் ஒரு நாய் உடல்கருகி உயிரிழந்தன. புகாரின் பேரில், கருப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.