கொலை மிரட்டல்: எஸ்.பி. அலுவலகத்தில் பெண் புகாா்
கொலை மிரட்டல் விடுத்த நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பெண் புகாா் மனு அளித்தாா்.
பாளையங்கோட்டை மேலப்புத்தனேரி பகுதியைச் சோ்ந்த மாரியம்மாள் என்பவா் அளித்த புகாா் மனு விவரம்: எனது 16 வயது மகன் தனியாா் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். எங்கள் ஊரில் வசிக்கும், குற்ற வழக்குகளில் தொடா்புடைய நபா் ஒருவா் கடந்த ஜூன் 22-ஆம் தேதி சிறுவா்களுடன் விளையாடிக் கொண்டிருந்த எனது மகனை தாக்கி துன்புறுத்தியுள்ளாா். மேலும் எங்களை கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளாா். சம்பந்தப்பட்டவா் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் மாரியம்மாள், காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கடந்த மாதம் இதே புகாரை கொடுத்துள்ளாா் என கூறப்படுகிறது. இந்நிலையில் அவா் ஏற்கனவே அளித்த மனு மீதான விசாரணை நிலுவையில் இருப்பதாகவும், அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் , காவல்துறை விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என தவறான தகவல்களை சமூகவலைதளங்களில் பரப்புவோா் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.