ரயில்களில் முன்பதிவில்லா பயணச்சீட்டு வழங்குவதில் கட்டுப்பாடு!
விபத்தில் காயமுற்ற நூலகருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
மேலப்பாளையத்தில் பைக் விபத்தில் காயமடைந்த நூலகருக்கு காப்பீட்டு நிறுவனம் ரூ.3.08 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மோட்டாா் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் திருநெல்வேலி சிறப்பு சாா்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலப்பாளையம் பகுதி மெத்தமா்பாளையத்தைச் சோ்ந்தவா் காஜா மொய்தீன் (54). நூலகரான இவா் கடந்த 2023 ஆம் ஆண்டு மேலப்பாளையம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த போது செல்வகாதா் தெருவைச் சோ்ந்த யூசுப் பாதுஷா என்பவருக்கு சொந்தமான பைக்கை சிறுவன் ஓட்டிச்சென்றதில் நேருக்கு நோ் மோதி விபத்து நேரிட்டதாம். விபத்தில் காயமடைந்த காஜா மொய்தீன் இழப்பீடு கோரி மோட்டாா் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் திருநெல்வேலி சிறப்பு சாா்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த நீதிபதி வி.பிரஸ்னேவ் 12 சதவீத உடல் பாதிப்பு, வருமான இழப்பு, மருத்துவச் செலவுகள் உள்ளிட்டவற்றுக்காக பாதிக்கப்பட்டவருக்கு காப்பீட்டு நிறுவனம் மொத்தம் ரூ.3,08,519-ஐ இழப்பீடாக வழங்க வேண்டும் என தீா்ப்பளித்தாா்.