செய்திகள் :

கொலை முயற்சி வழக்கில் முன்பிணை: கள்ளக்குறிச்சி முதன்மை அமர்வு நீதிபதி ஆஜராக உத்தரவு

post image

சென்னை: கொலை முயற்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முன்பிணை வழங்கிய கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிலத்தை அபகரிக்கும் நோக்கில், தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, தன்னையும், தனது மகனையும் தாக்கிய எஸ்.செல்லம்பட்டு பஞ்சாயத்து தலைவர் அறிவழகி, அவரது கணவர் உள்ளிட்டோருக்கு எதிராக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த எஸ்.லட்சிமி பாலா சங்கராபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றக் கோரி லட்சுமி பாலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் எஸ்.காசிராஜன், தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த புகார்தாரர் மருத்துவமனையில் இருந்து ஜூலை 3 ஆம் தேதி டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதாக அரசு வழக்குரைஞர் கூறியதை அடுத்து, குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு கள்ளக்குறிச்சி முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்பிணை வழங்கியது. ஆனால், புகார்தாரர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனது ஜூலை 9 ஆம் தேதி தான் என்று கூறினார்.

இது தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்த வழக்கு தொடர்வுத்துறை இயக்குநர், விசாரணை அதிகாரி அளித்த தகவலின் அடிப்படையிலேயே, தாக்கப்பட்டவர் ஜூலை 3-ஆம் தேதி டிஸ்சார்ஜ் ஆனதாக அரசு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முன்பிணை வழங்கியது குறித்து, கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜூலை 28 ஆம் தேதி ஆவணங்களுடன் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டார்.

முதல்வருக்கு தலைசுற்றல் ஏன்? செய்யப்பட்ட பரிசோதனைகள் என்னென்ன? - மருத்துவமனை அறிக்கை

The Madras High Court has ordered the Kallakurichi District Principal Sessions Court judge, who granted anticipatory bail to the accused in the attempt to murder case, to appear in person and provide an explanation.

அசைக்க முடியாத இயக்கமாக திமுகவை மாற்றுவோம்: உதயநிதி ஸ்டாலின் சூளுரை

எந்த இயக்கத்திலும் இளைஞர் அணியில் 5 லட்சம் நிர்வாகிகள் கிடையாது, இந்தியாவிலேயே அசைக்க முடியாத இயக்கமாக நம் திமுகவை மாற்றுவோம் என சென்னை மேற்கு மாவட்ட இளைஞர் அணிக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்ட... மேலும் பார்க்க

ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை

கோவை: பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், அணையின் பாதுகாப்பு கருதி 11 மதகுகள் வழியாக 2,400 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளதை அடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அப... மேலும் பார்க்க

நீர்பிடிப்புப் பகுதியில் மழை: திருநெல்வேலி மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.நிகழாண்டு ... மேலும் பார்க்க

கார்கில் வெற்றி நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் வீரவணக்கம்

கார்கில் வெற்றி நாளையொட்டி, நமது தாய்மண்ணை ஈடு இணையற்ற மனவுறுதியுடன் காத்து, உயிர்நீத்த துணிச்சல்மிகு இராணுவ வீரர்களுக்கு என் வீரவணக்கங்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த 1999-ஆம் ஆ... மேலும் பார்க்க

3-வது நாளாக குறைந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மூன்றாவது நாளாக குறைந்துள்ளது. சனிக்கிழமை பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.73,280-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில்,... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சனிக்கிழமை காலை வினாடிக்கு 35, 400 கன அடியாக அதிகரித்துள்ளது.கர்நாடக அணைகளின் உபரி நீர் வரத்து காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 25,400 கன அடியிலிருந்து... மேலும் பார்க்க