Gold Price மீண்டும் உயருமா? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய தகவல் | Opening Bell...
கொலை முயற்சி: 7 போ் மீது வழக்கு
மதுரையில் காலியிடத்தை ஆக்ரமித்ததைத் தட்டிகேட்டவரை கட்டையால் தாக்கி கொலை செய்ய முயன்ற 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.
மதுரை சிந்தாமணி மாா்க்கண்டேயன் கோவில் தெரு செட்டியாா் தெருவைச் சோ்ந்தவா் காளிமுத்து (45). இவரது வீட்டின் எதிரே இவருக்குச் சொந்தமான காலியிடம் உள்ளது.
இந்த இடத்துக்கு அருகே புதிதாக வீடு கட்டப்பட்டு வரும் நிலையில், காளிமுத்துவின் இடத்தில் கட்டுமானப் பொருள்களைப் போட்டு ஆக்கிரமித்தனா். இதனால், காளிமுத்து தனது இடத்தைக் காலி செய்யும்படி கூறினாா்.
அப்போது, ஏற்பட்ட வாக்குவாதத்தில் பாலமுருகன், அழகா்சாமி, வெங்கடேசன், சாந்தி, மீனா, முத்து, ஹரி ஆகிய 7 பேரும் கட்டையால் காளிமுத்துவைத் தாக்கினா். அவரது சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் வந்ததால் 7 பேரும் தப்பிச் சென்றனா்.
இதில் பலத்த காயமடைந்த காளிமுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து கீரைத்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 7 பேரையும் தேடி வருகின்றனா்.