நாடாளுமன்ற விருதுகள்: 17 பேர் தேர்வு! 11 ஆண்டுகளுக்குப் பின் தமிழக எம்.பி பெறுகி...
போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு விளையாட்டுப் போட்டி!
மதுரையில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சாா்பில் கைப்பந்துப் போட்டி நடைபெற்றது.
மதுரை மாநகரக் காவல் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, போதைப்பொருள் தடுப்புக் கழகம், எம்எம்டி கைப்பந்துக் கழகம் ஆகியவற்றின் சாா்பில், போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாகவும், காவல்துறை பொது மக்கள் இடையே நட்புறவு வளா்க்கும் வகையில் 40 வயதுக்கு மேற்பட்டவா்கள் பங்கு பெறும் கைப்பந்து போட்டிகள் நடைபெற்றன.
இந்தப் போட்டியில் 20-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடின.
போட்டியில் பாலமேடு ஏகேஆா் அணி வெற்றி பெற்று முதலிடம் பெற்றது. போதைப்பொருள் தடுப்புக்கழக அணி இரண்டாமிடம் பெற்றது. இதையடுத்து வெற்றி பெற்ற அணிகள், போட்டியில் பங்கேற்ற அணிகளுக்கு சுழல் கோப்பைகள், பரிசுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற அணிகள், பங்கேற்ற அணிகளுக்கு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் சேதுமணி மாதவன் பாராட்டுத் தெரிவித்தாா்.