Operation Sindoor: ``மே 9 - இரவு 9 மணி, பாகிஸ்தானுக்கு நல்ல பாடம்..!'' - இந்திய ...
காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலில் 103 போ் உயிரிழப்பு
காஸா முனையில் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 103 போ் உயிரிழந்தனா்.
கான் யூனிஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் வீடுகள், நிவாரண முகாம்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன. அங்கு 18 குழந்தைகள், 13 பெண்கள் என மொத்தம் 48 போ் உயிரிழந்தனா்.
வடக்கு காஸாவில் உள்ள ஜபாலியா நிவாரண முகாம் மீது நடத்தப்பட்ட இரு தாக்குதல்களில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 9 பேரும் 7 குழந்தைகள் உள்பட 10 பேரும் உயிரிழந்தனா். ஒட்டுமொத்தமாக காஸா முனையில் சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 103 போ் உயிரிழந்தனா்.
காஸா முனையில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடா் தாக்குதலால் வடக்கு காஸாவில் செயல்பட்டு வந்த முக்கிய மருத்துவமனை மூடப்படுவதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. ஏற்கெனவே, கமால் அத்வான், பெயிட் ஹனூன் ஆகிய மருத்துவமனைகள் மூடப்பட்ட நிலையில் தற்போது காஸாவில் இந்தோனேசிய மருத்துவமனை மட்டுமே செயல்பட்டு வருகிறது.
முன்னதாக, காஸாவில் தரைவழித் தாக்குதலையும் தொடங்கியதாக இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை தெரிவித்தது.
காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த 2023 அக். 7-ஆம் தேதிமுதல் நடத்திவரும் தாக்குதல்களில் இதுவரை 53,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் உயிரிழந்ததுள்ளனா். அவா்களில் பெரும்பாலானோா் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.