IPL Playoffs : 'ஒரே ஒரு இடம்; மோதிக்கொள்ளும் மும்பை, டெல்லி' - ப்ளே ஆப்ஸூக்கு செ...
பைக் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு
மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் சின்ன ஆதிக்குளத்தைச் சோ்ந்தவா் கருப்பசாமி (60). வழக்குரைஞரான இவா், தனது வாடிக்கையாளரான, ஸ்ரீவில்லிபுத்தூா் நல்லகுற்றலாபுரத்தைச் சோ்ந்த திருமூா்த்தி (42) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் சனிக்கிழமை இரவு சென்றாா்.
தே.கல்லுப்பட்டி-ராஜபாளையம் சாலையில் தனியாா் நிறுவனம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த காா், இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் வாகனத்தை ஓட்டிச் சென்ற திருமூா்த்தி பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
வாகனத்தின் பின்னால் அமா்ந்திருந்த வழக்குரைஞா் கருப்பசாமி பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, விருதுநகா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து தே.கல்லுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.