செய்திகள் :

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: சஞ்சய் ராய்க்கு சாகும்வரை ஆயுள்

post image

கொல்கத்தா பெண் மருத்துவா் படுகொலை வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருக்கும் சஞ்சய் ராய்-க்கு ஆயுள் தண்டனை வழங்கி சியால்டா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொல்கத்தாவில் பணியில் இருந்த பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராயை சாகும் வரை சிறையில் அடைக்க கொல்கத்தா சியால்டா நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. மேலும் குற்றவாளிக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது.

பெண் மருத்துவர் கொலை வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என்று கடந்த வாரம் தீர்ப்பளிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு விதிக்கப்படும் தண்டனை விவரம் இன்று வெளியாகியுள்ளது.

முன்னதாக இன்று காலை தண்டனை குறித்து இரு தரப்பு வாதங்கள் முன் வைக்கப்பட்டன. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சஞ்சய் ராயை சாகும்வரை சிறையில் அடைக்கும் வகையில் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

முன்னதாக, சிபிஐ தரப்பில், அரிதிலும் அரிதான வழக்கு என்பதால், குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சம்பவத்தின் நடந்தது எப்படி?

2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31 வயது முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். இந்த சம்பவத்தில் காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவரை காவல் துறை கைது செய்தது.

கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில், இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது. அப்போது, கொலை சம்பவம் தொடா்பான ஆதாரத்தை சேதப்படுத்தியதாக அந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வா் சந்தீப் கோஷ் ஆகியோரை சிபிஐ கைது செய்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்தி, மருத்துவா்களின் போராட்டத்துக்கு வழிவகுத்தது.

கொல்கத்தாவில் உள்ள சியால்டா நீதிமன்றத்தில் கூடுதல் மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி அனிா்பன் தாஸ் முன்பாக, இந்த வழக்கு விசாரணை கடந்த நவ.12-ஆம் தேதிமுதல் நடைபெற்று வந்த நிலையில் தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்ற நீதிமன்ற விசாரணைக்குப் பின்னா், இந்த வழக்கில் நீதிபதி அனிா்பன் தாஸ் சனிக்கிழமை அளித்த தீா்ப்பில், ‘சஞ்சய் ராய்க்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் சிபிஐ நிரூபித்துள்ளது. பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த சஞ்சய் ராய், அதன் பின்னா் பெண் மருத்துவரின் குரல்வளையை நெரித்து, அவரின் முகத்தை இறுக்கிமூடியதால் அவா் உயிரிழக்க நோ்ந்துள்ளது. சஞ்சய் ராய் குற்றவாளி’ என்று தீா்ப்பளித்தாா். இன்று பிற்பகலில் தண்டனை விவரம் பிறப்பிக்கப்படவிருக்கிறது.

பேரவைத் தலைவர்கள் மாநாடு: அப்பாவு வெளிநடப்பு!

பிகாரில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாட்டிலிருந்து தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு வெளிநடப்பு செய்தார். அரசமைப்பு சட்டத்தின் 75ஆவது ஆண்டு விழாவையொட்டி சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாடு பிகார் ... மேலும் பார்க்க

சாகும் வரை சிறை போதாது! நீதிமன்றம் முன்பு மருத்துவர்கள் போராட்டம்!

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு வாழ்நாள் சிறை போதாது எனக் கூறி இளநிலை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பார்க்க

உ.பி.யில் காதலியை மணக்க ஹிந்துவாக மாறிய முஸ்லிம் காதலர்!

உத்தரப் பிரதேசத்தில் காதலியை திருமணம் செய்ய முஸ்லிம் இளைஞர் ஒருவர் ஹிந்து மதத்திற்கு மாறியுள்ளார். மதம் மாறி திருமணம் செய்ய காதலர் வீட்டில் சம்மதிக்காத நிலையில், பெண் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின... மேலும் பார்க்க

'குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கியிருக்க வேண்டும்' - தேசிய மகளிர் ஆணைய முன்னாள் தலைவர்

கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் கொலை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணைய முன்னாள் தலைவர் ரேகா சர்மா கூறியுள்ளார். கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனைய... மேலும் பார்க்க

சாகும்வரை சிறை போதாது! மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் மமதா அதிருப்தி

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

தில்லியை தெற்கு சூடானாக மாற்ற வேண்டாம்: ஆம் ஆத்மிக்கு மாலிவால்!

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக மாநிலங்களவை எம்.பி., ஸ்வாதி மாலிவால் கடுமையாக விமர்சித்துள்ளார்.செய்தியாளர்களுடன் பேசிய அதிஷி, ப... மேலும் பார்க்க