செய்திகள் :

கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு: குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்த முக்கியக் குற்றவாளி!

post image

கொல்கத்தா மருத்துவர் பாலியல் வன்முறை செய்து கொல்லப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளி தன்னை நிரபராதி என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவமனை வளாகத்தில் கடந்த ஆகஸ்ட் 9 அன்று பெண் பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்டு சடலமாகக் கிடந்தார். விசாரணையில் அவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டது தெரிய வந்தது.

இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கொல்லப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்க மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த சஞ்சய் ராய் (33) இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கொலை நடந்த அடுத்த நாளே கைது செய்யப்பட்டார். போலீஸ் காவலில் இருக்கும் அவருக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றத்தில் மரண தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க | மருத்துவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பேராசிரியருக்கு சிறை!

கடந்த நவ. 11 அன்று நீதிமன்றம் விசாரணையைத் தொடங்கியது. சுமார் 50 பேரிடம் சாட்சியங்களைப் பெற்ற நீதிமன்றம் நேற்று (டிச. 20) சஞ்சய் ராயிடம் விசாரணை மேற்கொண்டது.

விசாரணையில் தான் குற்றவாளி இல்லை என்று சஞ்சய் ராய் தெரிவித்துள்ளார். ”நான் குற்றவாளி அல்ல. நான் இந்த வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ளேன்” என சஞ்சய் ராய் நீதிமன்றத்தில் கூறியதாக அவரது வக்கீல் சௌரவ் பந்தோபாத்யாய் தெரிவித்துள்ளார்.

மேலும், “நீதிபதி அனிர்பன் தாஸ் சஞ்சயிடம் 100-க்கும் மேற்பட்ட கேள்விகளைக் கேட்டார். 6 மணி நேரம் நீடித்த இந்த விசாரணை கேமராவில் பதிவு செய்யப்பட்டது” என அவரது வக்கீல் கூறினார்.

இதையும் படிக்க|அமித் ஷாவை வெறிநாய் கடித்துவிட்டது: கர்நாடக அமைச்சர் விமர்சனம்!

முன்னதாக, கடந்த மாதம் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட வேனில் இருந்த சஞ்சய் ராய் தான் நிரபராதி என பொதுமக்களின் முன்னிலையில் கத்தினார். தற்போது மீண்டும் நீதிமன்றத்தில் அவர் இவ்வாறு கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜனவரி 2, 2025 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் திறன்மிகு பணியாளா்களுக்கு உலகெங்கிலும் வாய்ப்பு: பிரதமா் மோடி

இந்தியாவின் திறன்மிகு பணியாளா்களுக்கு உலகின் பல்வேறு நாடுகள் வாயில் கதவை திறந்துள்ளன. அந்த நாடுகளில் இந்திய பணியாளா்களின் நலனை உறுதி செய்யும் ஒப்பந்தங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்று பிரதமா்... மேலும் பார்க்க

மகாராஷ்டிர அமைச்சா்களுக்கு துறை ஒதுக்கீடு: ஃபட்னவீஸிடம் உள்துறை; அஜீத்திடம் நிதி, ஷிண்டேவிடம் நகா்ப்புற மேம்பாடு!

மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்று இரண்டு வாரங்களுக்குப் பிறகு அமைச்சா்களுக்கான துறைகள் சனிக்கிழமை ஒதுக்கப்பட்டன. தேவேந்திர ஃபட்னவீஸ் உள்துறையை மீண்டும் கைவசப்படுத்திக்கொண்டாா். மேலும், எரிசக்தி, சட்டம் ... மேலும் பார்க்க

செறிவூட்டப்பட்ட அரிசிக்கு ஜிஎஸ்டி குறைப்பு: கவுன்சில் பரிந்துரை

செறிவூட்டப்பட்ட அரிசி வித்துகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி விகிதத்தை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் உள்பட பல்வேறு பரிந்துரைகளை மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் சனிக்கிழமை வழங்கியது. ராஜஸ்தான் மாநிலம் ஜெ... மேலும் பார்க்க

கூட்டு பாலியல் வன்கொடுமை: பாஜக எம்எல்ஏ உள்பட 16 போ் மீது வழக்குப் பதிவு

சிறப்பு நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து உத்தர பிரதேச மாநிலம், படாயுன் மாவட்டத்தின் பில்சி தொகுதி பாஜக எம்எல்ஏ ஹரிஷ் ஷக்யா, அவரது உறவினா்கள் உள்பட 16 போ் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக... மேலும் பார்க்க

பரஸ்பர நம்பிக்கையே திருமண உறவின் அடித்தளம்: விவாகரத்து வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து

பரஸ்பர நம்பிக்கை, தோழமை மற்றும் அனுபவங்கள் ஆகியவையே திருமண உறவின் அடித்தளம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மென்பொறியாளா் தம்பதிகளுக்கு விவாகரத்து வழங்கிய சென்னை உயா்நீதிமன்ற தீா்ப்பை உறுதிப்படுத்தி உச... மேலும் பார்க்க

ஐ.நா. சா்வதேச நீதி கவுன்சிலின் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மதன் லோகுா் நியமனம்

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி லோகுா் ஐ.நா.வின் சா்வதேச நீதி கவுன்சிலின் தலைவராக நியமிக்கப்பட்டாா். இது தொடா்பாக ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்க... மேலும் பார்க்க