செய்திகள் :

Bigg Boss Tamil 8: ' Safe' ஆக வெளியேறிய ஆண் போட்டியாளர்... இந்த வார எவிக்‌ஷனில் நடந்தது என்ன?

post image

பிக்பாஸ் சீசன் 8, 75 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் பிறகு சில வாரங்கள் கழித்து வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் 6 பேர் என 24 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அடுத்தடுத்த எவிக்‌ஷன் மூலம் ரவீந்தர், அர்னவ், சுனிதா, சாச்சனா, ஆர்.ஜே.ஆனந்தி, தர்ஷிகா, சிவக்குமார், சத்யா, வர்ஷினி வெங்கட், தர்ஷா குப்தா, உள்ளிட்டோர் வெளியேறினர்.

தொடர்ந்து ரஞ்சித், சௌந்தர்யா, பவித்ரா ஜனனி, ஜாக்குலின், மஞ்சரி, அன்ஷிதா, ஜெஃப்ரி, ராணவ், ராயன். தீபக், அருண், முத்துக்குமரன், வி.ஜே விஷால் ஆகியோர் நிகழ்ச்சியில் தொடரும் சூழலில் இந்த வார எவிக்‌ஷனுக்கான ஷூட்டிங் நேற்று பிக்பாஸ் செட்டில் நடந்தது.

நாமினேஷன் பட்டியலில் சௌந்தர்யா, முத்துக்குமரன், அருண், ரஞ்சித் உள்ளிட்ட 11 பேர் இருந்தனர்.

நடிகர் ரஞ்சித்

இவர்களில் மக்களிடமிருந்து பெற்ற ஓட்டுகளின் அடிப்படையில் நடிகர் ரஞ்சித் வெளியேறியிருக்கிறார்.

சமீப காலமாக பொதுவெளியில் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசி வந்த நிலையில் ரஞ்சித் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குத் தேர்வான போதே, இவர் அந்த வீட்டில் எத்தனை நாள் தாக்குபிடிப்பார் என்கிற கேள்வி எழுந்தது. ஆனாலும் பெரிய அளவில் எந்த சர்ச்சையிலும் சிக்காமல் 75 நாட்களுக்கும் மேலாக நிகழ்ச்சியில் இருந்து விட்டு வெளியேறியிருக்கிறார். இவர் ஆட்டத்தை safe ஆக விளையாடுவதாக தொடர்ந்து கூறி வந்தனர்.

ரஞ்சித் வெளியேறிய எபிசோடு இன்று ஒளிபரப்பாகவிருக்கிறது.

BB Tamil 8 Day 76: அன்ஷிதாவிடம் அதிரடி விசாரணை; அடுத்தது முத்துவுக்கா?- `வாத்தியார்' விசே

‘அடுத்த வாரத்துல இருந்து ஃபயர் மோட் ஆன்’ என்று கடந்த வாரத்தில் பவித்ரா சொன்னார். அவர் சொன்னதைச் செய்கிறாரோ, இல்லையோ, விஜய் சேதுபதி வாரத்திற்கு வாரம் தனது ஃபயர் மோடை அதிகப்படுத்திக் கொண்டே செல்கிறார். ... மேலும் பார்க்க

செட்டில்மென்ட் முடிந்தது; நானும் ஜெயஸ்ரீயும் முறைப்படி பிரிந்து விட்டோம் – சீரியல் நடிகர் ஈஸ்வர்

சீரியல் நடிகர் ஈஸ்வர் தனக்கு முறைப்படி விவாகரத்து ஆகிவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார்.’தேவதையைக் கண்டேன்' முதலான பல சீரியல்களில் நடித்தவர் ஈஸ்வர். சின்னத்திரை நடிகர் சங்கத்திலும் பொறுப்பிலிருக்கிறார். ... மேலும் பார்க்க

BB Tamil 8: "எப்படி ராணவ் கேவலமா நடிக்கிறான்னு சொன்னீங்க?" - வெளுத்து வாங்கும் விஜய் சேதுபதி

இந்த வார செங்கல் டாஸ்கில் ராணவும், ஜெஃப்ரியும் மல்லுக்கட்டி உருண்டதில் ராணவ்விற்குத் தசைநார் கிழிவு ஏற்பட்டது.கீழே விழுந்து தோள்பட்டை வலியால் துடிக்கும் ராணவ்வைப் பார்த்து அன்ஷிதா, ஜெஃப்ரி, சவுந்தர்யா... மேலும் பார்க்க

அந்த வீடியோவால வெளியில தலைகாட்ட முடியல - சீரியல் நடிகர் துரைமணி

சன் டிவியில் 'மருமகள்' ஜீ தமிழ் சேனலில் 'வள்ளியின் வேலன்' ஆகிய சீரியல்களில் நடித்து வருபவர் துரைமணி. விஜய் டிவியில் 'பாவம் கணேசன்' தொடரிலும் நடித்திருந்தார். நடிப்பு தவிர, சீரியலுக்கு எடிட்டிங் ஸ்டூடி... மேலும் பார்க்க

Bigg Boss 8: ``சௌந்தர்யாவின் அம்மா அப்பா அழுதுட்டிருக்காங்க"- சௌந்தர்யா தோழி நந்தினி

பிக்பாஸ் சீசன் 8 முடிவடைய இன்னும் மூன்று வாரங்களே இருப்பதால் நிகழ்ச்சியில் கடைசிக் கட்ட விறுவிறுப்பைப் பார்க்க முடிகிறது. இன்று வார இறுதி எவிக்‌ஷனுக்கான ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிற சூழலில், யார் யார... மேலும் பார்க்க

BB Tamil 8: "செம்மையா நடிக்குறாங்க, பச்சையா நடிக்குறாங்க"- யாரைச் சொல்கிறார் விஜய் சேதுபதி?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 76 வது நாளுக்கான புரோமோ வெளியாகி இருக்கிறது.இந்த வாரத்திற்கான டாஸ்க்கில் சிறப்பாகச் செயல்பட்ட முத்துக்குமரன், பவித்ரா, ஜெப்ஃரி மூவரும் அடுத்த வார கேப்டன்சி டாஸ்க்கில் பங்கேற்றன... மேலும் பார்க்க