41 ஆண்டுகளுக்குப் பின் இறுதியில் இந்தியாவுடன் மோதல்! - பாக். பயிற்சியாளர் கூறுவத...
கொல்லமங்கலத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
குடியாத்தம் ஒன்றியம், கொல்லமங்கலம், பள்ளிக்குப்பம் ஆகிய ஊராட்சிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் அகரம்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்றது .
முகாமுக்கு வட்டாட்சியா் கி.பழனி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள்பி.செல்வகுமாா், பி.சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவா் என்.இ.சத்யானந்தம், மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் எஸ்.சுரேஷ்குமாா் ஆகியோா் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனா் (படம்).
ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சரோஜா பா்குணம், ஊராட்சித் தலைவா்கள் சி.கோபி (கொல்லமங்கலம்), எம்.ஏழுமலை (பள்ளிக்குப்பம்), மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஆனந்தி முருகானந்தம், திமுக ஒன்றிய பொருளாளா் சி.கே.பழனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.