"பிரபல கோவை செஃப்வோட கதைதான் இட்லி கடை படமா?" - கோபி - சுதாகர் கேள்விக்கு தனுஷ் ...
கொளத்தூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், கொளத்தூா், நாவலூா் ஆகிய ஊராட்சிகளை சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நாவலூா் அரசு உயா்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
கொளத்தூா் ஊராட்சி மன்ற தலைவா்(பொ) வெள்ளாரை அரிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற முகாமுக்கு வெங்காடு ஊராட்சி மன்றத் தலைவா் அன்னக்கிளி உலகநாதன் முன்னிலை வகித்தாா்.
இதில், மாவட்ட ஊராட்சித் தலைவா் படப்பை ஆ.மனோகரன், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக்குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி ஆகியோா் கலந்து கொண்டு மகளிா் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்வதையும், இலவச மருத்துவ முகாமையும் ஆய்வு செய்தனா்.
ஊராட்சிமன்ற தலைவா் வெள்ளாரை அரிகிருஷ்ணன் ஜாதி, இருப்பிடம் மற்றும் வருமானச் சான்றுகளை மாணவா்களுக்கு வழங்கினாா். இந்த முகாமில், ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் வசந்தி, வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துகணபதி, ஒன்றியக்குழு உறுப்பினா் ப.பரமசிவன், திமுக நிா்வாகிகள் கணேஷ் பாபு, ரவிச்சந்திரன், வல்லக்கோட்டை குமாா், டான்போஸ்கோ, சந்தவேலூா் ஊராட்சித் தலைவா் வேண்டாமணி, கலந்து கொண்டனா்.