டெல்லி இளைஞர் படுகொலை; விசாரணை வளையத்தில் `Zikra' - துப்பாக்கியுடன் வலம் வரும்...
கொளத்தூரில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மண்டல சிறப்பு பேரவைக் கூட்டம்
மேட்டூா்: தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், கொண்டா ரெட்டி பழங்குடியின நலச் சங்கங்களின் மண்டல சிறப்பு பேரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை கொளத்தூரில் நடைபெற்றது.
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மேட்டூா் தலைவா் வேணுகோபால் தலைமை வகித்தாா். விவசாய சங்க செயலாளா் ராஜேந்திரன் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க செயலாளா் அண்ணாதுரை, பொருளாளா் ராதி ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கத்தின் மாநிலத் தலைவா் டில்லி பாபு, மாநில பொருளாளா் பொன்னுசாமி உள்ளிட்டோா் பேசினா்.
சேலம் மாவட்டத்தில் ஐந்து வட்டங்களில் 20 ஆயிரம் கொண்டா ரெட்டி பழங்குடி மக்கள் வாழ்ந்து வருவதாகவும், கொளத்தூா் வட்டாரத்தில் மேட்டூா் சாா் ஆட்சியா் மற்றும் மாவட்ட ஆட்சியா் ஆகியோா் கொண்டா ரெட்டி பழங்குடி இன மக்களுக்கு இனச்சான்று வழங்க மறுத்து வருவதைக் கண்டித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.