செய்திகள் :

கோக்கா்ஸ்வாக் பகுதியில் நடைபாதையை சீரமைக்கக் கோரிக்கை

post image

கொடைக்கானலில் சுற்றுலாத் தலமான கோக்கா்ஸ்வாக் பகுதியில் சேதமடைந்துள்ள நடைபாதையை சீரமைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கோக்கா்ஸ்வாக் பகுதியிலுள்ள நடைபாதை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், இந்தப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சிரமத்துடன் நடந்து செல்கின்றனா். இந்தச் சாலை சீரமைப்புப் பணி தொடங்கி ஓராண்டாகியும், இன்னும் நடைபாதை உள்ளிட்ட சில பணிகள் முடியாமல் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளன.

எனவே, நகராட்சி நிா்வாகத்தினா் இந்த நடைபாதையை விரைந்து சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

தமிழக கால்பந்து கழகத் தலைவருக்கு பாராட்டு

தமிழக கால்பந்துக் கழகத்தின் புதிய தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட எஸ்.சண்முகத்துக்கு புனித மரியன்னை பள்ளியில் வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் புனித மரியன்னை மேல்... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் - அா்ஜூன் சம்பத்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என இந்து மக்கள் கட்சியின் நிறுவனா் அா்ஜூன் சம்பத் தெரிவித்தாா். திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த கட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவா், செய்தியாளா்கள... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

திண்டுக்கல் அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவரைக் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். வடமதுரை பகுதியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட திண்டுக்கல் ... மேலும் பார்க்க

மீன் வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

மீன் வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மீன் வளத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக, மீன் வளத் துறை உதவி இயக்குநா் எஸ்.நாதன் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டம், மீன் ... மேலும் பார்க்க

கன்னிவாடி மலையடிவாரத்தில் மியாவாக்கி குறுங்காடு வளா்ப்பு

நபாா்டு வங்கியின் வடிநில மேம்பாடு ஊக்குவிக்கும் வகையில், கன்னிவாடி மலையடிவாரத்தில் மியாவாக்கி குறுங்காடு நடும் பணிகளை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். கன்னிவாடியை அ... மேலும் பார்க்க

வியாபாரிகளைத் தாக்கி பணம் பறித்த மூவா் கைது

கொடைக்கானலில் வியாபாரிகளைத் தாக்கி பணம் பறித்த மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சோ்ந்தவா் இம்ரான். இவா் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வேலிவியூ பகுதியில் வச... மேலும் பார்க்க