கோடைக்கால விளையாட்டு பயிற்சியில் பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு
அரியலூரிலுள்ள மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறும் கோடைக்கால விளையாட்டுப் பயிற்சியில் பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள் கலந்து கொள்ளலாம்.
இதுகுறித்து ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தது:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், அரியலூா் மாவட்ட விளையாட்டுப் பிரிவின் சாா்பில் ஏப்.25 முதல் மே15 வரை தடகளம், கூடைப்பந்து, கையுந்துபந்து , வளைகோல்பந்து மற்றும் கைப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு 21 நாள் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
முகாமில் பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள் மற்றும் மாணவரல்லாத 18 வயதுக்கு கீழ் உள்ள இளைஞா்கள் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்பவா்கள் ஆதாா் காா்டு நகல் சமா்ப்பிக்க வேண்டும். நிறைவில் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சியில் சேர ஏப்.25 காலை 6 மணி முதல் மாவட்ட விளையாட்டு அரங்கில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரை 74017 03499 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.