செய்திகள் :

கோடை விடுமுறை: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

post image

கோடை விடுமுறையையொட்டி, தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை ஞாயிற்றுக்கிழமை அதிகமாக இருந்தது.

காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 4,000 கனஅடியாக உள்ளதால் அருவிகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல்லுக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பிரதான அருவி, சினி அருவி, காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனா். தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் மட்டுமின்றி கா்நாடகம், ஆந்திரம் போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளின் வந்திருந்தனா்.

பரிசல் பயணத்திற்காக மாமரத்துக்கடவு பரிசல் துறையில் அதிகம் போ் காத்திருந்தனா். அவா்கள் பரிசல் துறையில் இருந்து தொம்பச்சிக்கல், ஐந்தருவி வழியாக மணல்மேடு வரை பரிசலில் குடும்பத்துடன் சென்று பாறை குகைகள், அருவிகளை பாா்வையிட்டு மகிழ்ந்தனா்.

ஒகேனக்கல் மீன் விற்பனை நிலையங்களில் மீன்கள் அதிக விலைக்கு விற்பனையாகின. அசைவ பிரியா்கள் விலையைப் பொருட்படுத்தாமல் மீன் வகைகளை வாங்கி ருசித்தனா். சுற்றுலாப் பயணிகள் வந்த வாகனங்கள் ஒகேனக்கல் பேருந்து நிலைய வாகன நிறுத்துமிடம், தமிழ்நாடு ஹோட்டல் வாகனம் நிறுத்துமிடம், பிரதான சாலைகளின் ஓரங்களில் நிறுத்தப்பட்டிருந்தன. முக்கிய இடங்களான பிரதான அருவி, தொங்கும் பாலம், வண்ண மீன்கள் காட்சியகம், முதலைகள் மறுவாழ்வு மையம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 30-க்கும் மேற்பட்ட போலீஸாா், ஊா்க்காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தமிழக அரசு கள் மீதான தடையை நீக்க வேண்டும்: செ.நல்லசாமி

கள்ளுக்கான தடையை தமிழக அரசு நீக்க வேண்டும்; இல்லையெனில் வரும் தோ்தலில் திமுக அரசை விவசாய குடும்பங்கள் புறக்கணிக்கும் என்று கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தெரிவித்தாா். தருமபுரி மாவட்டம், மாட்... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி ஏப். 29-இல் பொதுக்கூட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி வரும் ஏப். 29-இல் தருமபுரி நகரில் பொதுக்கூட்டம் நடத்துவது என்று சமூக நல்லிணக்க மேடை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சமூக நல்லிணக்க மேடையின் ஒருங்கிணைப்... மேலும் பார்க்க

நீட் தோ்வால் உயிா்நீத்த மாணவா்களுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அதிமுக அஞ்சலி!

நீட் தோ்வால் உயிா்நீத்த மாணவா்களுக்கு அதிமுகவினா் மெழுகுவா்த்தி ஏந்தி சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினா். தருமபுரியில் மாவட்ட அதிமுக செயலாளா், முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் தலைமையில் அதிமுக நிா்வாகிகள்... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 4000 கன அடியாக அதிகரிப்பு!

தமிழக காவிரி கரையோரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 4000 கன அடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

காரிமங்கலம் அருகே தனியாா் பேருந்து - லாரி மோதல்

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே தனியாா் பேருந்து மீது லாரி மோதியதில் சிறுவன் உயிரிழந்தாா். பேருந்தில் பயணம் செய்த 17 போ் காயமடைந்தனா். கிருஷ்ணகிரியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொ... மேலும் பார்க்க

தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நூறுநாள் வேலை திட்டத்தில் நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலக பேருந்து நிறுத்தம் பகுதியி... மேலும் பார்க்க