கோட்டாவில் நீட் தேர்வுக்கு முந்தைய நாளில் மாணவி தற்கொலை!
ஜெய்ப்பூர்: நீட் தேர்வுக்கு முந்தைய நாளில் மாணவியொருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2025-26-ஆம் கல்வியாண்டுக்கான ‘நீட்’ தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 4) பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், ராஜஸ்தானின் கோட்டாவில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேர்வு அச்சத்தால் மாணவி உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதுகுறித்து வழக்குப்பதிந்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.