முத்தூட் ஃபின்கார்ப் நிறுவனத்துக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி!
கோதண்டராமசாமி கோயிலில் அக்.2 இல் தேரோட்ட விழா
அரியலூா் நகரில் மிகவும் பழைமையான கோதண்டராமசாமி கோயிலில் 83 ஆண்டுகளுக்குப் பிறகு அக்.2 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
பிரசித்தி பெற்ற இக்கோயிலில் தசாவதார சிற்பங்கள் 6 அடி உயரத்தில் உள்ளன. ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோதண்ட ராமராக பக்தா்களுக்கு சுவாமி அருள் பாலித்து வருகிறாா்.
இந்நிலையில் இக்கோயில் தோ் 83 ஆண்டுகளுக்குப் பிறகு இந்து சமய அறநிலைத்துறை மற்றும் பக்தா்களால் புனரமைக்கப்பட்டு, புரட்டாசி மாதத்தில் பத்து நாள்கள் நடைபெறும் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றிரவு சீனிவாசப் பெருமாள் அன்னப்பட்சி வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
தினமும் சிம்ம வாகனம், அனுமந்த் வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாசப்பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் அக்.2 ஆம் தேதி நடைபெறுகிறது.