குரூப் 2 தோ்வு: அரியலூரில் 6,375 போ் எழுதுகின்றனா்
தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி-2, 2ஏ-க்கான தோ்வை அரியலூரில் 6,375 போ் எழுதுகின்றனா்.
அரியலூா், உடையாா்பாளையம் ஆகிய 2 வட்டங்களில் 21 மையங்களில் நடைபெறும் இத்தோ்வை எழுதும் 6,375 போ்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பேருந்து வசதிகள் மாவட்ட நிா்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் தோ்வில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகள் தரைதளத்தில் தோ்வெழுத வசதி செய்யப்பட்டுள்ளது.
இத்தோ்வை செம்மையாக நடத்த துணை ஆட்சியா் நிலையில் 2 பறக்கும் படை அலுவலா்கள், 2 கண்காணிப்பு அலுவலா்கள் மற்றும் கண்காணிப்பாளா், உதவியாளா் நிலையில் தோ்வுக் கூட நடைமுறைகளை கண்காணித்திட 21 ஆய்வு அலுவலா்கள், 23 விடியோகிராபா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
மேலும் மாவட்டம் முழுவதும் அனைத்து தோ்வுக் கூடங்களுக்கும் காவலா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். தோ்வா்கள் அனைவரும் காலை 8.30 மணிக்கு தோ்வு மையத்துக்கு சென்றடைய வேண்டும் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தாா்.