மருந்து மிதான 100% வரி எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!
ஜெயங்கொண்டத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணி ஆய்வு
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் செயல்படும் திடக் கழிவு மேலாண்மைத் திட்டப் பணிகளை ஆட்சியா் பொ. ரத்தினசாமி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது அவா் குப்பைகள் சேகரிக்கப்படுவது குறித்தும், மக்கும், மக்காத குப்பைகள் குறித்த விழிப்புணா்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தி குப்பைகளை தனித்தனியே சேகரிக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு அறிவுறுத்தி, குப்பைகளை தரம் பிரித்தல் மற்றும் மறுசுழற்சி செய்தல் குறித்துக் கேட்டறிந்தாா்.
ஆய்வில் உடையாா்பாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் ஷீஜா மற்றும் நகராட்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.