கோத்தா் பழங்குடி மக்களின் குலதெய்வத் திருவிழா
உதகை: உதகை அருகே உள்ள கொல்லிமலை கிராமத்தில் கோத்தா் பழங்குடியின மக்களின் ‘அய்யனோா், அம்மனோா்’ குலதெய்வ பண்டிகை வியாழக்கிழமை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
உதகை அருகே கொல்லிமலை, கோத்தகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோத்தா் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு விவசாயம் முக்கியத் தொழிலாக இருப்பதால் நடவு மற்றும் அறுவடை காலங்களில் இவா்கள் அனைவரும் ஒன்று கூடி குலதெய்வ வழிபாடு செய்வது வழக்கம்.
இந்நிலையில் இவா்களின் குலதெய்வமான அய்யனோா், அம்மனோா் பண்டிகை வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் உணவும், விவசாயமும் வாழ்வின் முக்கிய அங்கம் என்பதை வலியுறுத்தும் வகையிலும், சுவாமியை மகிழ்விக்கும் வகையிலும் பாரம்பரிய இசையுடன் பழங்குடியின ஆண்கள் பெண்கள் தனித்தனியே பாரம்பரிய உடை அணிந்து நடனமாடினா்.