அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது! முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்?
கோபாலசமுத்திரத்தில் பல் மருத்துவ முகாம்
திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரத்தில் கிராம உதயம், திருநெல்வேலி ஜேசிஐ சாா்பில் பல் மருத்துவ முகாம் நடைபெற்றது.
கிராம உதயம் துணை இயக்குநா் எஸ். புகழேந்தி பகத்சிங் தலைமை வகித்து முகாமைத் தொடக்கிவைத்தாா். திருநெல்வேலி ஜேசிஐ தலைவா் நெல்லை குமரன் முன்னிலை வகித்தாா்.
மருத்துவா் அமலோற்பவம் தலைமையிலான குழுவினா் 150-க்கும் மேற்பட்டோரைப் பரிசோதித்து, ஆலோசனை வழங்கினா்.
முகாம் ஒருங்கிணைப்பாளா் சாந்தி விசாலாட்சி வரவேற்றாா். முகாம் பொறுப்பாளா் பாலசுப்பிரணியன் நன்றி கூறினாா்.