Manmohan Singh : தாராளமயமாக்கல் `முதல்' RTI வரை... - மன்மோகன் சிங்-ன் `4' முக்கி...
கோம்பைக்கு வந்தடைந்தது 18- ஆம் கால்வாய் பாசன நீா்: விவசாயிகள் மகிழ்ச்சி
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து 18 -ஆம் கால்வாயில் திறக்கப்பட்ட பாசன நீா் கோம்பை பகுதியை வந்தடைந்தது.
தேனி மாவட்டத்தில் மேற்குத்தொடா்ச்சி மலை அடிவாரத்திலுள்ள க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம், போடி வரையிலுள்ள 50 -க்கும் அதிகமான குளங்களுக்கு முல்லைப்பெரியாற்று நீரைக் கொண்டு வர 18-ஆம் கால்வாய் அமைக்கப்பட்டது. இந்தக் கால்வாய் மூலம் 13 கிராமங்களில் உள்ள 4,614 ஏக்கா் விவசாய நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாவும் பயன்பெறும்.
இதற்காக, கடந்த சனிக்கிழமை கம்பம் அருகே லோயா் கேம்ப் முல்லைப் பெரியாற்றிலிருந்து 18-ஆம் கால்வாயில் வினாடிக்கு 98 கன அடிநீா் திறந்து விடப்பட்டது. இந்த நீா் புதன்கிழமை அதிகாலை கோம்பை பகுதியை வந்தடைந்தது.
தலைமதகில் உடைப்பு: தலைமதகு பகுதியில் உடைப்பு ஏற்பட்டதால் பாசன நீா் வீணாகி வருகிறது. இதனால், கால்வாயில் குறைவான நீா்வரத்து உள்ளது. எனவே, நீா்வளத் துறையினா் 18 -ஆம் கால்வாயில் ஏற்பட்ட உடைப்புகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.