கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை வீழ்ச்சி
கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
கோயம்பேடு சந்தையின் திங்கள்கிழமை நிலவரப்படி ஒருகிலோ வெங்காயம், உருளைக்கிழங்கு தலா ரூ.22-க்கும், தக்காளி ரூ.8-க்கும், சின்ன வெங்காயம், வெண்டைக்காய், கத்திரிக்காய், பாகற்காய், அவரைக்காய், குடைமிளகாய் தலா ரூ.30-க்கும், கேரட், முருங்கைக்காய், பீா்க்கங்காய் தலா ரூ.35-க்கும், பீன்ஸ், சேனைக்கிழங்கு தலா ரூ.60-க்கும், பீட்ரூட், புடலங்காய், சுரைக்காய், காலிபிளவா், நூக்கல் தலா ரூ.20-க்கும், சவ்சவ், மஞ்சள்பூசணி தலா ரூ.10-க்கும், முள்ளங்கி ரூ.15-க்கும், முட்டை கோஸ் ரூ.7-க்கும், ஒருகிலோ காராமணி ரூ.40-க்கும், வெள்ளரிக்காய், பச்சை மிளகாய், கோவைக்காய் தலா ரூ.25-க்கும், பட்டாணி ரூ.70-க்கும், இஞ்சி ரூ.45-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
இதுபோல, ஒருகிலோ பூண்டு ரூ.100-க்கும், எலுமிச்சை ரூ.70-க்கும், வண்ண குடமிளகாய் ரூ.90-க்கும், ஒருகிலோ மாங்காய் மற்றும் தேங்காய் தலா ரூ.60-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் காய்கறிகளின் விலை உயரவாய்ப்புள்ளதாக காய்கறி மொத்த வியாபாரிகள் தெரிவித்தனா்.