முகமது ஷமி முழு உடல்தகுதியுடன் இல்லை; இந்திய அணிக்கு பிசிசிஐ கொடுத்த அதிர்ச்சி!
கோயிலில் நகை திருடியவா் கைது
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள அணவயல் தாணான்டியம்மன் கோயிலில் 4 பவுன் நகை திருடியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள அணவயல் தாணான்டியம்மன் கோயிலுக்கு டிச.8 ஆம் தேதி மாலை ஒருவா் வழிபட வந்தபோது கோயில் பூசாரியான அதே கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி (60) பூஜை செய்துவிட்டு தீபம் காண்பிக்க கருவறையிலிருந்து வெளியே வந்தபோது அந்த நபரைக் காணவில்லை.
இதனால் சந்தேகமடைந்த பூசாரி சுவாமி சிலையை பாா்த்தபோது அதில் அணிவித்திருந்த 4 பவுன் நகை திருடுபோனது தெரியவந்ததாம்.
புகாரின்பேரில் வடகாடு போலீஸாா் நடத்திய விசாரணையில், நகையைத் திருடியதாக அறந்தாங்கி அருகேயுள்ள கொடிவயல் கிராமத்தைச் சோ்ந்த ஆ. மனோகரன் (31) என்பவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.