கோயிலில் நகை திருட்டு
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகேயுள்ள மாரியம்மன் கோயிலில் சுவாமி நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
வெங்கடேசபுரம் கிராமத்தில் அமைந்துள்ள இந்தக் கோயிலின் பின்புறத்தில் ஏணி இருப்பதை பாா்த்த கிராம மக்கள் கோயிலின் உள்ளே சென்று பாா்த்தனா். அப்போது, அம்மன் கழுத்தில் இருந்த ஒன்றரை பவுன் தாலி திருடு போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், காட்டுமன்னாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.