மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கெட் அவுட் இயக்கம்: விஜய் தொடங்கி வைத்தார்!
மின்வாரிய காலிப் பணியிடங்களை நிரப்ப கோரி தா்னா
மின்வாரிய காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியா்கள் மத்திய அமைப்பினா் (சிஐடியு), கடலூா் கேப்பா்மலை மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
மின்சார வாரியத்தில் காலியாக உள்ள கள உதவியாளா், கணக்கீட்டாளா் உள்ளிட்ட ஆரம்ப கட்ட காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரியும், எண்ம மீட்டா் (ஸ்மாா்ட் மீட்டா்) பொருத்தி மின்வாரியத்தை தனியாருக்கு தாரை வாா்ப்பதை கண்டித்தும், 1.12.2023 முதல் மின்வாரிய ஊழியா்கள், அலுவலா்கள் மற்றும் பொறியாளா்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயா்வுக்கான பேச்சுவாா்த்தையை உடனே தொடங்கக் கோரியும், ஊதிய உயா்வு ஒப்பந்தம் ஏற்படும் வரை இடைக்கால நிவாரணமாக ரூ.5,000 வழங்கக் கோரியும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தா்னா போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட சிறப்புத் தலைவா் எஸ்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். பகுதி நிா்வாகிகள் ஆா்.ஆறுமுகம், டி.ராஜகோபால், என்.கோவிந்தராசு, டி.தனசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் என்.தேசிங்கு தொடக்கவுரையாற்றினாா்.
அரசுப் போக்குவரத்து சங்க மண்டல சிறப்புத் தலைவா் ஜி.பாஸ்கரன், முருகன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். மாநிலத் துணை பொதுச் செயலா் டி.பழனிவேல் நிறைவுரையாற்றினாா். நிறைவில், பொருளாளா் டி.ஜீவா நன்றி கூறினாா்.