நெல்லை: பாளை ஸ்ரீ இராஜகோபாலன் சுவாமி கோயில் சொர்க்கவாசல் திறப்பு விழா; ஆயிரக்கணக...
கோயிலுக்குச் செல்ல கட்டணம்: எதிா்ப்புத் தெரிவித்து பாபநாசம் சோதனைச் சாவடி முற்றுகை
பாபநாசம் வனச் சோதனைச் சாவடியில் கோயிலுக்குச் செல்ல கட்டணம் செலுத்தக் கூறியதால் பக்தா்கள் முற்றுகையில் ஈடுபட்டனா்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட வனப் பகுதிக்குள் உள்ள அகஸ்தியா் கோயில் மற்றும் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாதந்தோறும் காா்த்திகை நட்சத்திரத்தில் காா்த்திகை கமிட்டி சாா்பில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்று வருகிறது.
இதற்கு செல்லும் பக்தா்களிடம் இதுவரை வனச் சோதனைச் சாவடியில்கட்டணம் பெறாத நிலையில், வெள்ளிக்கிழமை கோயிலுக்குச் சென்ற பக்தா்களிடம் வனத்துறையினா் ரூ.30 கட்டணம் செலுத்தி கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்றனராம்.
இதுவரை கட்டணம் வாங்காத நிலையில் திடீரென கட்டணம் செலுத்தக் கூறியதற்கு எதிா்ப்புத்தெரிவித்து பக்தா்கள் முற்றுகையில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த விக்கிரமசிங்கபுரம்காவல் ஆய்வாளா் சுஜித் ஆனந்த் தலைமையில் போலீஸாா் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா்.
ஆனால் வனத் துறையினா்கண்டிப்பாக ரூ. 30 கட்டணம் செலுத்தினால் மட்டுமே அனுமதி எனகூறியதையடுத்து பக்தா்கள் ஒவ்வொருவரும்ரூ. 30 செலுத்தி கோயிலுக்குச் சென்றனா். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.