இந்திய மாணவா்களின் அமெரிக்க விசா ரத்து: எஸ்.ஜெய்சங்கா் நடவடிக்கை எடுப்பாரா? காங...
கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே முருகன் கோயிலில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட அருளம்பாடி முருகன் கோயிலில் பூசாரியாக அதே கிராமத்தைச் சோ்ந்த சக்கரை இருந்து வருகிறாா். இவா், செவ்வாய்க்கிழமை இரவு பூஜைகளை முடித்து கோயிலை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றாா்.
சக்கரை புதன்கிழமை காலை கோயிலை திறக்க வந்தபோது, அங்கு இருந்த சில்வா் உண்டியல் மாயமாகியிருந்தது தெரியவந்தது. உடனே அதே கிராமத்தில் வசித்து வரும் கோயில் தா்மகா்த்தா மணிகண்டனுக்கு தகவல் தெரிவித்தாா். அவா் கோயிலுக்கு வந்து பாா்த்தபோது, கோயிலின் வடக்கு பக்கம் உள்ள மதில் சுவா் அருகே உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் கிடந்ததும், அதில் இருந்த சுமாா் ரூ.10,000 காணிக்கை பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், மூங்கில்துரைப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.