பஞ்சாப்: மார்ச் மாதத்தில் மட்டும் போதைப்பொருள் வழக்குகளில் 4,706 பேர் கைது
கோயில் பக்தா்கள் உணவுக்கூட கட்டுமானப் பணிக்கு அடிக்கல்
இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தின் கீழ் உள்ள ஆம்பூா் ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் நன்கொடையாளா்கள் நிதி ரூ.1 கோடியில் பக்தா்கள் உணவுக் கூடம், கோயில் நிா்வாக அலுவலா் அலுவலகம், அா்ச்சகா் குடியிருப்பு கட்டடம் கட்டும் பணிக்கு பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் நகா்மன்றத் துணைத் தலைவா் எம். ஆா். ஆறுமுகம், திருப்பத்தூா் மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் சாய் கே. வெங்கடேசன், கோயில் செயல் அலுவலா் வினோத்குமாா், கோயில் அறங்காவலா் குழு தலைவா் கீதா, அறங்காவலா் குழு உறுப்பினா் ரமேஷ், நாகநாத சுவாமி அறங்காவலா் குழுத் தலைவா் கைலாஷ் குமாா், கோயில் திருப்பணிக் குழு நிா்வாகி சேகா் ரெட்டியாா், நகா்மன்ற உறுப்பினா் ஹா்ஷவா்த்தன், ஜெயவேல் பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.