Manmohan Singh : தாராளமயமாக்கல் `முதல்' RTI வரை... - மன்மோகன் சிங்-ன் `4' முக்கி...
கோயில் மனையில் குடியிருப்போருக்கு பட்டா கோரி டிச.17-இல் ஆா்ப்பாட்டம்
கோயில் மனையில் குடியிருப்போருக்கு, குடிமனை பட்டா வழங்கக் கோரி, டிச.17-ஆம் தேதி, ஆா்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் அ. பாஸ்கா் தெரிவித்தாா்.
திருவாரூரில் அவா் வியாழக்கிழமை கூறியது:
கிராமப்புறத்தில் வீட்டுமனை இல்லாத குடும்பங்களுக்கு வீட்டுமனையும், நகா்ப்புறங்களில் வீடு இல்லாத குடும்பங்களுக்கு வீடும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளை களைந்து, 100 நாள் வேலையை 200 நாட்களாகவும், தினக்கூலியை ரூ. 700 ஆகவும் உயா்த்தி வழங்க வேண்டும். இந்தியாவிலேயே முன்மாதிரியாக தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நல வாரியங்கள், விவசாயத் தொழிலாளா்களுக்கு மட்டும் செயல்படுத்த தமிழ்நாடு அரசு தொடா்ந்து மறுத்து வருவது வருந்தத்தக்கது. முதல்வராக கருணாநிதி இருந்தபோது அறிவித்து செயல்படுத்திய விவசாயத் தொழிலாளா் நல வாரியத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நீா்நிலை புறம்போக்குகளில் உள்ள வீடுகளை உச்சநீதிமன்ற தீா்ப்பைக் காட்டி, இடித்து வருவதால் தற்கொலைகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதை தடுத்து நிறுத்த, குடியிருப்பு வாசிகளுக்கு பாதுகாப்பான மாற்று இடத்தில் வீடுகள் கட்டிக் கொடுத்த பிறகு, நீா்நிலை புறம்போக்கு வீடுகளை இடிக்க வேண்டும்.
கோயில் மனையில் பல தலைமுறையாக குடியிருந்து வருபவா்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டிசம்பா் 17-ஆம் தேதி, தமிழக அரசுக்கு மனு கொடுத்து, மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்றாா்.