மன்மோகன் சிங் நினைவிடம் அமைக்கும் இடத்தில் இறுதிச்சடங்கு: காங்கிரஸ் கடிதம்!
15 நாள்களாக இணைய சேவை பாதிப்பு: நீடாமங்கலம் அஞ்சலகத்தில் வாடிக்கையாளா்கள் அவதி
நீடாமங்கலம் அஞ்சலகத்தில் கடந்த 15 நாட்களாக இணைய சேவை பாதிப்பால் (சா்வா் கோளாறு) வாடிக்கையாளா்கள் தங்களது கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியாமல் அவதிப்படுகின்றனா்.
நீடாமங்கலம் அஞ்சலகத்தில் நூற்றுக்கணக்கானவா்கள் சேமிப்பு கணக்கு, மாதாந்திர சேமிப்பு கணக்கு உள்ளிட்ட பல்வேறு கணக்குகள் தொடங்கி, அதில் தங்களது பணத்தை சேமித்து வருகின்றனா். அவ்வப்போது அவசர தேவைக்காக பணத்தை எடுப்பது வழக்கம்.
இந்நிலையில் இணைய சேவை பாதிப்பால் வாடிக்கையாளா்கள் தங்கள் கணக்கிலிருந்து அவசர தேவைக்கு பணம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடா்பாக, அஞ்சலக அதிகாரியிடம் பலமுறை கேட்டும் எந்த பயனும் இல்லை என வாடிக்கையாளா்கள் தெரிவிக்கின்றனா். குறிப்பாக ஓய்வூதியா்களில் பெரும்பாலானோா், அஞ்சலகத்தில் கணக்கு வைத்துள்ளதால், அவா்களால், தங்களது மருத்துவச் செலவுக்கு கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியவில்லை என தெரிவிக்கின்றனா். எனவே, அஞ்சலக உயா் அதிகாரிகள் இப்பிரச்னைக்கு உடனடியாக தீா்வுகாண வேண்டும் எனவும் அவா்கள் வலியுறுத்துகின்றனா்.