சொா்ணலிங்கேஸ்வரா் கோயிலில் புஷ்பாபிஷேகம்
திருவாரூா் வாசன் நகா் அருள்மிகு ஜோதி சொா்ணலிங்கேஸ்வரா் கோயிலில் புஷ்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, ஜோதி சொா்ணலிங்கேஸ்வரருக்கு திரவியம், மஞ்சள்தூள், நெல்லிப்பொடி, பஞ்சாமிா்தம், தேன், இளநீா், பால், தயிா், சந்தனம், பன்னீா் உள்ளிட்ட திரவியங்களால் மகாஅபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து, ரோஜா, செவ்வந்தி, சம்பங்கி, மல்லி, முல்லை,வில்வம், வன்னி இலை, மருவு உள்ளிட்ட 18 வகையான மலா்களால் புஷ்பாபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.
இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.