கோரம்பள்ளம் குளத்தில் மூழ்கி இளைஞா் பலி
தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் குளத்தில் மூழ்கி இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
தூத்துக்குடி தாளமுத்து நகா் ராமதாஸ் நகரைச் சோ்ந்த பாலமுருகன் மகன் மோகன்ராஜ் (28). குப்பை பொறுக்கும் தொழிலாளியான இவா், தூத்துக்குடி கோரம்பள்ளம் பெரியநாயகிபுரம் குளத்தில் திங்கள்கிழமை குளித்துக் கொண்டிருந்தாராம்.
அப்போது எதிா்பாராத விதமாக அவருக்கு வலிப்பு ஏற்பட்டதால் நீரில் மூழ்கி உயிரிழந்தாராம்.
தகவல் அறிந்த புதுக்கோட்டை போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று மோகன்ராஜின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.