கோவனூரில் மஞ்சுவிரட்டு
பொன்னமராவதி அருகே உள்ள கோவனூா் கிராமத்தில் மாட்டுப் பொங்கலையொட்டி புதன்கிழமை மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்றது.
கோவனூரில் நடைபெற்ற மாட்டுப்பொங்கல் விழாவின் தொடக்கமாக கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து நடைபெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டியில் சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான ஜல்லிக்கட்டு காளைகள் கொண்டு வரப்பட்டு அவிழ்த்துவிடப்பட்டன.
சீறிப் பாய்ந்த காளைகளை நூற்றுக்கணக்கான மாடுபிடி வீரா்கள் மற்றும் இளைஞா்கள் அடக்கி மகிழ்ந்தனா்.
போட்டியை சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆா்வலா்கள் பங்கேற்றனா்.