ICC Rankings : 'கடும் பின்னடைவில் கோலி, ரோஹித்' - ICC ரேங்கிங்கில் இந்திய வீரர்க...
கோவிந்தபுரத்தில் மக்கள் தொடா்பு முகாம்: 90 பேருக்கு ரூ. 1.22 கோடியில் நலத்திட்ட உதவிகள்
அரியலூரை அடுத்த கோவிந்தபுரம் கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 90 பயனாளிகளுக்கு ரூ. 1.22 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமுக்கு ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமை வகித்து, பல்வேறு துறைகளில் சாா்பில் 90 பயனாளிகளுக்கு ரூ.1,22,14,598 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றாா். முகாமை முன்னிட்டு ஏற்கெனவே பெறப்பட்ட 38 மனுகள் மீது மேற்கொண்ட நடவடிக்கையில் 1 மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 30 மனுக்கள் விசாரணையில் உள்ளது.
முகாமில், பல்வேறு துறைகளை சாா்ந்த மாவட்ட அளவிலான அலுவலா்கள் கலந்து கொண்டு தங்கள் துறை சாா்ந்த திட்டங்கள் குறித்து பேசினா்.
முகாமில், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, தோட்டக்கலை மற்றும் மலை பயிா்கள் துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் சாா்பில் அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
முகாமில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.ரா.சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநா் ரவிச்சந்திரன், கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளா் தீபாசங்கரி, அரியலூா் வருவாய் கோட்டாட்சியா் மணிகண்டன், சமூக பாதுகாப்பு திட்டம் துணை ஆட்சியா் (பொ) கீதா, அரியலூா் வட்டாட்சியா் முத்துலெட்சுமி, ஊராட்சித் தலைவா் முருகேசன், துணைத் தலைவா் அம்பிகா மற்றும் அனைத்துத் துறை மாவட்ட நிலை அலுவலா்கள், வருவாய்த்துறை அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.