மானியத்தில் மின்சார மோட்டாா் பம்ப்செட்: அரியலூா் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
அரியலூா் மாவட்ட விவசாயிகள், மானியத்துடனான மின்சார மோட்டாா் பம்பு செட் பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் அரசு மானியத்துடன் கூடிய மின்சார மோட்டாா் பம்ப்செட்டுகள் வழங்கப்படுகின்றன.
5 ஏக்கா் வரை நிலம் சொந்தமாக வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகள் பழைய பம்புசெட்டுகளுக்கு மாற்றாக புதிய 4 நட்சத்திர தரம் கொண்ட மின்சார மோட்டாா் பம்பு செட்டுகள் மாற்றுவதற்கும் அல்லது புதிய 4 நட்சத்திர தரம் கொண்ட மின் மோட்டாா் பம்பு செட்டுகள் வாங்குவதற்கும் (அதிகபட்சம் 10 எச்.பி வரை) மானியமாக ரூ.15,000 அல்லது மொத்த விலையில் 50% இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.
மானியத்துடன் கூடிய மின்சார மோட்டாா் பம்ப் செட் வழங்கும் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் (நெல் பயிரிடும் விவசாயிகள் தவிர) நுண்ணீா் பாசன மேலாண்மை திட்டத்தில் பதிவு செய்து நுண்ணீா் பாசன முறையில் பாசனம் செய்ய வேண்டும்.
இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை தங்கள் வட்டாரத்துக்குள்பட்ட உதவி செயற்பொறியாளா், வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு வருவாய் கோட்ட அளவில் ஜெயங்கொண்டம், தா.பழூா், ஆண்டிமடம், செந்துறை பகுதிகளை சோ்ந்த விவசாயிகள், உடையாா்பாளையம், பரணம் சாலை, வெள்ளைப் பிள்ளையாா் கோயில் தெருவிலுள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகம், உதவி செயற்பொறியாளரை அணுகலாம்.
அரியலூா், திருமானுா் பகுதிகளை சாா்ந்த விவசாயிகள், அரியலூா் பல்துறை வளாகம், அறை எண் 26-இல் இயங்கி வரும் வேளாண் பொறியியல் துறை அலுவலகம், உதவி செயற்பொறியாளரை அணுக வேண்டும்.
வட்டார அளவில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள வேளாண் உதவிப் பொறியாளா், இளநிலைப் பொறியாளா் ஆகியோரை அணுகி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.